Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மக்களே… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக தூத்துக்குடி மக்கள் அனைவரும் மாலை 6 மணி முதல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூத்துக்குடியில் மாலை 6 மணி முதல் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கடற்கரை மற்றும் நீர்நிலைகள் அருகில் மக்கள் செல்ல வேண்டாம். பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Categories

Tech |