Categories
தேசிய செய்திகள் வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வெப்பசலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சமீபத்தில் தான் தமிழகத்தை கஜா புயல் நிலைகுலையச்செய்தது. ஆனால், தற்போது வந்த பானி புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில்,  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சுமார் இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related imageமேலும் கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் மேக மூட்டமாக காணப்படும் என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |