இந்தியர் ஒருவர் தன்னுடைய உடைமைகளை திருடியவர்களுக்கு இலவசமாக சாப்பாடு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் கேரளாவைச் சேர்ந்தவரான மிதுன் என்பவர் இந்திய உணவகம் ஒன்றை ஆரம்பித்து தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் ட்ரக் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் அந்த ட்ராக்கை நாளடைவில் ஒரு நடமாடும் உணவகமாக மாற்ற திட்டம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் தன்னுடைய டிரக் அருகே சில நபர்கள் கூடி இருப்பதைக் கண்ட மிதுனுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும் பிறகு ட்ரக்கில் சோதித்து பார்த்தபோது அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் முக்கியமான பல பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிப்ரவரி மாதத்தில் தான் ஹோட்டல் ஆரம்பித்து, கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டு வர முயற்சிக்கும் போது முக்கியமான பொருள் திருடப்பட்டால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். ஆனால் மிதுனுக்கு கோபம் வரவில்லை. இந்த நிலையிலும்கூட உணவுக்காக கஷ்டப்படுபவர்களுக்கு இலவச உணவு வழங்க தொடங்கியுள்ளார். முதலில் இதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு அடுத்து குறைந்த வருவாய் உள்ள ஏழை மக்களுக்கு, பிறகு வீடு இல்லாத மக்களுக்கு என்று இவருடைய சேவை தொடர்கிறது.
இது குறித்து மிதுன் கூறுகையில், அவர்களுக்கு உணவு இல்லாததால் தானே திருடியுள்ளார் உணவு கிடைத்தால் திருட மாட்டார்கள். எனக்கு தேவையான உணவு இருக்கிறது. எனக்கு உணவு கொடுத்த நாட்டுக்கு நான் எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த திருட்டு சம்பவம் குறித்து கூறும் போது அவருடைய குரலில் கோபமோ, இலவச உணவு கொடுப்பது குறித்து எந்த ஒரு பெருமையோ காணமுடியவில்லை ஒரே மாதிரியாக இருக்கிறார். தொடரட்டும் மிதுனின் சேவை…!