ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம், புதாரா கிராமத்தில் நேற்று நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததான். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குல்பஹத் காவல் நிலைய பொறுப்பாளர் அனுப் துபே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
சிறுவனை உயிருடன் மீட்பதற்காக தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து பணியாற்றினர். கிட்டத்தட்ட 20 மணி நேரம் கடுமையாக போராடி பேரிடர் மீட்பு குழுவினர் அச் சிறுவனை மீட்டனர். சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ குழு சிறுவனை பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 60 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் 30 அடி ஆழத்தில் இருந்ததாக தெரிய வந்தது.
சிறுவன் மூச்சு விட ஏதுவாக ஆக்சிஜன் வசதி, பிஸ்கட், பால் போன்ற உணவுகளை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுவனின் பாதுகாப்பு நடவடிக்கையாக சம்பவ இடத்தில் மருத்துவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.