Categories
தேசிய செய்திகள்

பப்ஜி சொந்தக்காரன் ப்ரீ பையர்…. சாதி சண்டைக்கு வழிவகுப்பதால்…. தடை விதிக்க கோரிக்கை…!!

ப்ரீ பையர் விளையாட்டு சிறுவர்களின் வாழ்க்கையை பாழக்கிவிடு என்பதால் இதற்கு அரசு தடை விதிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்தில் தான் பல சிறுவர்களின் உயிரை பறித்த பப்ஜி விளையாட்டு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் அதற்கு சொந்தக்காரன் போன்று இன்னொரு விளையாட்டான பிரீ பையர் வந்துள்ளது. சமீபகாலமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருவதால், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் குழந்தைகளை அதனை படிப்பிற்கு பயன்படுத்துவதை விட விளையாட்டிற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

தற்போது அறிமுகமாகியுள்ள இந்த ப்ரீ பையர் விளையாட்டானது சாதி கலவரத்தை உண்டாக்க கூட வழி வகுக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் ப்ரீ பையர் விளையாட்டை வைத்து சாதி சண்டைக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவாக பிரிந்து கொண்டு தங்கள் ஜாதி பெயரில் தனி அடையாளத்தை வைத்து கொண்டு, எதிரில் உள்ள மற்ற சாதியை சேர்ந்தவர்களை ஆபாசமான வார்த்தைகளால் பயன்படுத்துவதால் சாதிக் கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.மேலும் சிறுவர்களின் வாழ்க்கை பாழாகி விடும் என்பதற்காக பிரீ பையர் விளையாட்டுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |