Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தமிழில் டப் செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் படம்… சன் டிவியில் ஒளிபரப்பு…!!

தெலுங்கில் வெளியான அல்லு அர்ஜுனின்  திரைப்படம்  தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அலவைகுண்டபுரமுலோ’ . இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக  நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தின் ‘புட்ட பொம்மா’ பாடல் தெலுங்கில் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது தமிழில் ‘வைகுண்ட புரம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகவுள்ளது. சன் தொலைக்காட்சியில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரபுவுர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Categories

Tech |