Categories
தேசிய செய்திகள்

9 வயது சிறுவன்… அழைத்துச் சென்ற பக்கத்துவீட்டுக்காரன்… சிறுவனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!

9 வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரர் கூட்டி சென்று கொலை செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் வசிக்கும் விஷால் கெஜ்ஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்வப்னில் வசந்த் சோனவனே ஆகிய இருவரும் தங்கள் வேனில் காய்கறி விநியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வேனில் பக்கத்துவீட்டு ராம்ஜி என்ற சிறுவனை அழைத்து சென்று வியாபாரம் செய்தனர். வேனில் செல்லும் போது, அவர்களுடன் வந்த ஒருவரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டனர். அந்தத் திருடன் அந்த சிறுவன் பார்த்துவிட்டான்.

இந்த விஷயத்தை அந்த சிறுவன் அவரது தந்தையிடம் கூறி விடுவானோ என்ற அச்சத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனை அழைத்து சென்று கொலை செய்து வீசி விட்டு வந்துள்ளனர். தங்களின் மகனை காணவில்லை என்று சிறுவனின் தந்தை ராம்ஜி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேஜஸ் மற்றும் அவரது நண்பர் சுவப்னில் இருவரையும் பிடித்து விசாரித்தபோது சிறுவன் அவர்கள் செய்த திருட்டை பார்த்துவிட்டதால் கொன்றதாக கூறியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |