புரெவி புயல் தற்போது வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை மைய தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் நாளை அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மையம் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் புரெவி வலுவிழந்துள்ளதாகவும், இதனால் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் புயல் காற்றுடன் சேர்ந்து மழை பெய்யும். இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.