புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயலானது நேற்று முன்தினம் இரவு இலங்கை திரிகோணமலையில் தாக்குதலுக்கு ஏற்படுத்திவிட்டு கரையை கடந்தது. அதன்பின்னர் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டிருந்த இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறைக்கு மாற்றாக 2021 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.