போக்கோ எக்ஸ் 3, போக்கோ சி 3, போக்கோ எம் 2 மற்றும் போக்கோ எம் 2 ப்ரோ மாடல்கள் மீது எக்கச்சக்கமான ஆப்பர்களை பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் போக்கோ டேஸ் எனும் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பு விற்பனையில்
- போக்கோ எக்ஸ் 3,
- போக்கோ சி 3,
- போக்கோ எம் 2 மற்றும்
- போக்கோ எம் 2 ப்ரோ
போன்ற ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடி அறிவித்துள்ளது.
இந்த போக்கோ ஸ்மார்ட்போன்களின் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உடன் பிளிப்கார்ட் பக்கத்திற்கு செல்லலாம். ஏனெனில் இந்த சிறப்பு விற்பனை இன்று (டிசம்பர் 3) தொடங்கி டிசம்பர் 6 வரை மட்டுமே நீடிக்கும்.
போக்கோ சி3:
போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.7,999 க்கு பதிலாக ரூ. 6,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைக்கு நீங்கள் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜை பெறுவீர்கள். மறுகையில் உள்ள 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.7,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக ரூ.8,999 க்கு கிடைக்கும். இந்த ஸ்மாட்போன் ஆர்க்டிக் ப்ளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் கலர் விருப்பங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட போக்கோ சி 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட போகோவிற்கான எம்ஐயுஐ 12 மூலம் இயங்குகிறது. இது 6.53 இன்ச் அளவிலான எச்டி + 720×1,600 பிக்சல்கள், எல்சிடி டிஸ்ப்ளேவை வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு மற்றும் 20: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் கொண்டுள்ளது.
போக்கோ எம் 2:
போக்கோ எம் 2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.12,499 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் ப்ளூ வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு உள்ளது.
ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையை (ஓஎஸ்) அடிப்படையாகக் கொண்ட போக்கோவிற்கான எம்ஐயுஐ கொண்டு இயங்கும் போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ) ஆதரவினை கொண்டுள்ளது. ஓஎஸ் அப்டேட்டை பொறுத்தவரை, போக்கோ எம் 2 ஆனது கூடிய விரைவில் எம்ஐயுஐ 12-வை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.53 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080×2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகிறது.
போக்கோ எம் 2 ப்ரோ:
போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ.13,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கும்,அதன் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.13,999 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.15,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் க்ரீன் அண்ட் க்ரீனர், அவுட் ஆஃப் தி ப்ளூ மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு உள்ளது.
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட புதிய போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையிலான போக்கோவிற்கான எம்ஐயுஐ 11 மூலம் இயங்குகிறது. இது 20: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் அளவிலான திரை தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட .67 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
போக்கோ எக்ஸ் 3:
போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பேஸ் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.18,499 க்கு பதிலாக ரூ.16,999 க்கும், டாப்-எண்ட் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.18,999க்கும் வாங்க கிடைக்கிறது.
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட போக்கோவிற்கான எம்ஐயுஐ 12 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080×2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
POCO Days Sale விற்பனை சலுகைகள்:
போக்கோ ஸ்மார்ட்போன்களின் மீதான விலைக்குறைப்புகளை தவிர்த்து, பிளிப்கார்ட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளுடன் ரூ.5,000 என்கிற உடனடி தள்ளுபடி, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் ஐந்து சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக், ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டுகளுடன் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் மேற்குறிப்பிட்ட போக்கோ ஸ்மார்ட்போன்களின் மீது நோ காஸ்ட் இஎம்ஐ திட்டங்கள் போன்ற கூடுதல் சலுகைகளையும் பட்டியலிட்டுள்ளது.