Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 ஆண்டு சாதனை… இந்த வருஷம் மிஸ் ஆயிடுச்சு… ‘ரன் மெஷின்’ பட்டத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ..?

இந்தியா-ஆஸ்திரேலியா ஏதிரான 3 ஒருநாள் போட்டியில், ஒரு போட்டியில் கூட விராட் கோலி சதம் அடிக்கவில்லை. இதனால் ரன் மெஷின் படத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

விராட் கோலியின் இந்த மோசமான சாதனைக்கு காரணமாக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஹேசில்வுட். இவர் 2020ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலியை தொடர்ச்சியாக நான்கு முறை வீழ்த்தியுள்ளார். இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்திய அணி மொத்தம் 9 ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக மூன்று முறையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 முறையும் விளையாடியது. இந்த போட்டியில் விராட் கோலி 5 அரை சதங்களை கடந்துள்ளார்.

ஆனால் ஒரு சதத்தை கூட எட்ட முடியவில்லை. பெங்களூர் மைதானத்தில் 89 ரன்கள் எடுத்த போதும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இதனால் ரன் மெஷின் பட்டத்திற்கு ஆபத்து உண்டாகியுள்ளது. இதுவரை பதினோரு ஆண்டுகள் தொடர்ச்சியாக சதம் அடித்து வந்த நிலையில் அந்த சாதனையை தற்போது தகர்ந்து உள்ளது.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 19 ஆண்டுகள் தொடர்ச்சியாக சதமடித்து சாதனை படைத்தார். அடுத்த இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த நாதன் ஆஸ்டில் 12 வருடம் தொடர்ந்து சதம் விளாசி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹெர்ஷல் கிப்ஸ் 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக சதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |