புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, ராமநாதபுரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீட்டிக்கும். பின் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறையும். தூத்துக்குடி, ராமநாதபுரம் இடையே புயல் கரையை கடக்கும். மேலும் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.