உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.
மேலும் இறந்தவரின் உடலை உறவினர்கள் யாரும் பார்வையிடுவதற்கு முன்பு பிரேத பரிசோதனையை தொடங்கக் கூடாது. உடல் முழுவதும் எக்ஸ்ரே செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.