ராமருக்கு அணில் உதவியது போல ரஜினிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வெறுப்பு அரசியல் வேரோடி கிடக்கும் இன்றைய தமிழகத்தில், அன்பு சார்ந்து ஜாதி, மத பேதமற்ற அனைவரையும் அன்பினால் ஆரத்தழுவுகிற ஆன்மீக அரசியலை ரஜினி அரங்கேற்றுகிறார். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு புதிய திசையை காட்டும். மாற்றம் நோக்கி ரஜினி புறப்பட்டு விட்டார். ராமருக்கு அணில் உதவியது போல ரஜினிக்கு என்னாலான அனைத்தையும் செய்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.