ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் அது தேர்தலில் தான் தெரியும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும். ரஜினி கட்சி தொடங்கினால் அது திமுகவையும், திமுக வாக்கு வங்கியையும் பாதிக்காது.ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியது அவரது விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார்.