Categories
மாநில செய்திகள்

18 மாவட்டங்கள்… மக்களே உஷாரா இருங்க… நெருங்குகிறது ஆபத்து…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும். எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |