நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப்- 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாரான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ்ஷின் அதிரடியான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கேஜிஎப் சாப்டர் 2 ‘என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட்டானதால் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா ‘கே ஜி எஃப் 2’ படத்தின் டீசர் நடிகர் யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.