ரஜினியின் அரசியல் வருகைக்கு இயக்குனர் சேரன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வரவேற்கிறோம் சார். இப்போ இல்லை என்றால் எப்பவும் இல்லை… இது எனக்கு பிடிச்சிருக்கு. மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம். நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் ஆட்களைப் பொறுத்தே அந்த நம்பிக்கை உருவாகும். உங்களை வாழ வைத்தவர்களுக்கான இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.