சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்கள் வாழ சூழ்நிலை உருவாகும் என்று ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும் என ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் செவ்வாய் கோளில் மனிதர்களை தரை இறங்குவது குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்போதிலிருந்து சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்களை இறங்குவதைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இன்னும் 6 ஆண்டுகளில் இதற்கான முயற்சி தொடங்கப்படும் எனவும் அறிவித்தார்