Categories
மாநில செய்திகள்

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு… உயர்நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் பதில்..!!

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யக்கூடாது என்றும், ஆன்லைனில், ஆஃப்லைனில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் சட்டப் படிப்பிற்கான ஆரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சஞ்சய் கார்த்திக் என்ற சட்டக்கல்லூரி மாணவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிய தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதி தேர்வு எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் சட்டப் படிப்புகளுக்கான தேர்வு நடத்துவது தொடர்பான கால அட்டவணை குறித்து சிண்டிகேட் குழுவில் ஆலோசித்து முடிவு எடுத்த பின்னரே அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |