இன்னும் சில மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி வர இருப்பதாக துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில், அமெரிக்க நிறுவனமான பைசர் தடுப்பூசிகள் சில மணி நேரங்களில் வந்து சேர உள்ளதாக இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி Jonathan அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை பைசர் தொழிற்சாலையிலிருந்து ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் முக்கிய மருத்துவமனைகளுக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டு -70c வெப்பநிலையில் பாதுகாக்கப்பட உள்ளது.
மேலும் ஒரு முறை இந்த தடுப்பூசியை பயன்படுத்தினால், பின்னர் 2c – 5c வரையிலான வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். மேலும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு பாதுகாத்து பயன்படுத்த முடியும். இதையடுத்து இங்கிலாந்தின் 53 NHS அறக்கட்டளைகளும் மக்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் லண்டனில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் திங்கட்கிழமை முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. ஆனால் அது யாருக்கு வழங்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. லண்டனில் பெயர் வெளியிடப்படாத மொத்தம் 7 மருத்துவமனைகளுக்கு பைசர் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.