Categories
தேசிய செய்திகள்

“பையன் ரொம்ப உஷாரு” வகுப்பறையில் தாலி கட்டிய…. 11ம் வகுப்பு மாணவர்…. சர்ச்சையான சம்பவம்…!!

பள்ளி வளாகத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி என்றழைக்கப்படும் மேல்நிலைப்பள்ளியில் சத்தமில்லாமல் ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது. அந்த ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தன்னுடைய காதலியான சக மாணவியை காதலித்து வந்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தன்னுடைய காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில்  தற்போது ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறந்த நிலையில், அந்த மாணவர் தன்னுடைய காதலிக்கும் தனக்கும் எந்த பிரிவும் வந்துவிடக்கூடாது என்று எண்ணி  மஞ்சள் கயிற்றை அந்த மாணவியின் கழுத்தில் கட்டியுள்ளார். வகுப்பறையில் நடந்த இந்த சம்பவத்தை சக மாணவர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்த திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை பார்த்த கல்லூரி முதல்வர், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கி டி.சியை கையில் கொடுத்து அனுப்பியுள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய காலத்தில் இது போன்ற கோளாறு கொண்ட மாணவர்களின் செயலால் அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |