புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.
வங்கக் கடலில் உருவாக்கிய புரெவி புயல், மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் மழை நீர், வெள்ளம் போல் சூழ்ந்து உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.