இந்திய பொதுதுறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ.1,499 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். 1,499 ரூபாய் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் திட்டத்திற்கு போட்டியிட இந்த சிறப்பு திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல்-ன் இந்த புதிய ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan), 24GB தரவு மற்றும் 250 நிமிடங்கள் வரை தினசரி அழைப்பு 365 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை விட அதிகமாக டேட்டா சேவைகளை பயன்படுத்துவதற்கு பயனர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்.எம்.எஸ் அனுப்ப வசதியும் உள்ளது. அதை செயல்படுத்த, நீங்கள் ‘PLAN BSNL 1499’-யை 123-க்கு அனுப்ப வேண்டும். இந்த திட்டத்தை பேடிஎம் அல்லது போன் பே மூலமாகவும் செயல்படுத்தலாம். பிஎஸ்என்எல் சமீபத்தில் சிறந்த (OTT) சேவையை வழங்கத் தொடங்கியது. BSNL வாடிக்கையாளர்கள் ஜிங் ( ZING ) பயன்பாட்டின் இலவச சந்தாவையும் பெறலாம்.