ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைத்த சர்வதேச ஆசிரியர் விருதுக்கான பரிசை 10 நாட்டு போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பரிடெவாடி என்ற பகுதியிலுள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்சின்(32). உலகம் முழுவதிலும் உள்ள 140 நாடுகளில் இருந்து சர்வதேச ஆசிரியர் விருது விண்ணப்பித்த 12 ஆயிரம் பேரின் பெயர்களில், இவர் அந்த பரிசுக்கு தேர்வாகி இருக்கிறார். இவருக்கு இந்த விருதை யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து varky foundation என்ற அமைப்பு வழங்கியுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் பிறப்புரிமையான கல்வியை மாணவர்களுக்கு கிடைக்கும் வண்ணம் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என்று ரஞ்சித்சின் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் எப்போதுமே கொடுப்பதையும் பகிர்ந்துகொள்வதுயும் நம்புகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தான் பரிசாக பெற்ற 1 மில்லியன் அமெரிக்க டாலர்களில் பாதியை இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார். அதாவது இவர் போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியது 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழ்மையான மாணவர்களை பள்ளிக்கு சென்று அதிக மதிப்பெண்களை வாங்கியதற்கு ரஞ்சித்சின் உதவியதற்காக நடுவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இவருடைய பெரும் முயற்சியால் மாணவிகள் வறுமையினால் பாதியில் நிற்காமலும், இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படாமலும் கல்வியை தொடர்ந்துள்ளனர். இத்தாலி, பிரேசில்,வியட்நாம், தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா, நைஜீரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுடன் தன்னுடைய இந்த பரிசுத்தொகை பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.