தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுன் மூர்த்தி அக்கட்சியிலிருந்து விலகி அடுத்து ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கப்பட்டால் பாஜகவின் அறிவுசார் பிரிவு புதிய மாநில தலைவராக பிரபல சோதிடர் ஷெல்வி திடீரென நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பாஜகவினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று அரசியல் கட்சி தொடங்குவது உறுதி செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது, பாஜகவில் இருந்த அர்ஜுன் மூர்த்தியையும் உடன் வைத்துதான் செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் என ரஜினியால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.