கடலூரில் கனமழை காரணமாக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் முக்கியமாக கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பக்தர்கள் மார்பளவு தண்ணீரில் கோவிலுக்குள் சிக்கியுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் விரைவில் மீண்டு வர பிரார்த்திப்போம்.