மீனம் ராசி அன்பர்களே…! எந்த பணியும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
உடன் இருப்பவர்களிடம் வீண் வாக்குவாதம் பிரச்சனை உண்டாகும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பதுதான் ரொம்ப நல்லது.உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அதிகப்படியான பொறுப்புகள் வந்து சேரும். கடுமையான உழைப்பு இருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். மனதில் தேவையில்லாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். யாரைப் பற்றிய வருந்திக் கொண்டு இருப்பீர்கள். கற்பனை திறன் அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை இருக்கும்.எல்லா வித நன்மையும் அடைய இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். எதிர்ப்புகள் தலை தூக்கினாலும் சாமர்த்தியத்தால் வென்று விடுவீர்கள். சகோதரர்கள் கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள்.
காதலின் உள்ளவர்கள் நிதானமான போக்கையே அணுக வேண்டும். மாணவக் கண்மணிகள் ஆசிரியர் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தையும் சிறிதளவு தயிர் சாதத்தையும் அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தோஷங்கள் நீங்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.