மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ – லலித் குமார் சந்தித்துள்ள புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும், திரையுலகினரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது .
இதையடுத்து இன்று தளபதி விஜய் சினிமாவில் 28 வருடங்களை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட சிறப்பான நாளில் மாஸ்டர் படக்குழுவினர் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாஸ்டர் பட தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இருவரும் சந்தித்துள்ளனர். இவர்கள் சந்திப்பால் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் தீவிரம் அடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது .
Podu Vediya 🔥
Inime ellam adhiradi dhan! #Master pic.twitter.com/G8c9dLnRlz— XB Film Creators (@XBFilmCreators) December 4, 2020