பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற ஆஜித்திற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸிலிருந்து நாமினேட் ஆனவர்களில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்படுவார்.
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நாமினேட் ஆனவர்கள் அனிதா, ரம்யா பாண்டியன், ஆரி, ஷிவானி ,சனம் ஷெட்டி, நிஷா, ஆஜித் . இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேற ஆஜித்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அனிதா சம்பத் வெளியாவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.