பொதுத் தேர்வுக்காக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஜனவரி மாதம் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சந்தேகம் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 10, 11, 12 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயத்தில் கொரோனா பரவலும் அதிகரித்தது. தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளை துவங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பெற்றோர்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த காரணத்தினால் பள்ளிகள் திறப்பை அரசு தள்ளி வைத்தது. ஜனவரி மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்காக ஜனவரி 4ஆம் தேதி கட்டாயம் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வுகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.