அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர பிற ஆண்டுகளில் பயிலும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் எக்காரணம் கொண்டும் நேரில் அழைக்க கூடாது என்று உயர்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு அரசின் உத்தரவை மீறி மாணவர்களை கல்லூரிகள் அழைத்தால் அது கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் இரண்டாம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.