சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்டவை வாகனம் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்தது.
அதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மட்டுமல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.