ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கான விளம்பரங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடி அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பலரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோல ஆந்திரா மாநிலத்திலும் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் பேண்டஸி விளையாட்டுகளுக்கு விளம்பரப்படுத்துவதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 18 வயதிற்கு உள்ளவர்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடிக்க கூடாது. 18 வயதுக்கு கீழானோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடலாம் எனவும், நிறைய பணம் ஜெயிக்க முடியும் இதுபோன்ற விளம்பரங்களை சித்தரிக்கக் கூடாது. இந்த விளையாட்டுக்களை விளையாடுவதில் பணத்தை இழக்கக்கூடிய ரிஸ்க் இருக்கிறது என அனைத்து விளம்பரங்களிலும் போட வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதால் பணத்தை இழக்க நேரிடும் எனவும், இதற்கு அடிமையாக கூடும் எனவும் வீடியோ அல்லது ஆடியோவை வைக்க வேண்டும்.