Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடி வந்த சந்தோசம்…. கைநழுவி போனதால்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் இருவரும் சந்தித்து பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சங்கேஷ் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தான் காதலித்தவரே கணவனாக வரப்போகிறார் என்ற சந்தோஷத்தில் இருந்த அவரது காதலி ராகவி தன் காதலன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்துள்ளார்.

எனவே சில தினங்களாகவே ராகவி மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வீட்டிலிருந்த விஷத்தை குடித்து மயங்கி கீழேவிழுந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்துள்ளார். காதலித்து சேர இருந்த காதலர்கள் இருவருமே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |