தர்மபுரியில் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவரிடம் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அதை பார்த்த தர்மபுரி டவுன் காவல் துறை நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் டேவிட் என்றும், 68 வயதுயுடைய இவர் இங்கிலாந்து சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் ஆசிரியராக பணியாற்றியவர் என்றும் , பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.