இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து ஒருசில தினத்திலேயே புரேவி புயல் என்று புதிதாக உருவாகியது. இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. குறிப்பாக தொடர் மழையின் காரணமாக கோவில் குளங்கள் நிரம்பி வருகின்றன. திருவந்திபுரம், தேவநாதசுவாமி, புதுப்பாளையம், ராஜகோபாலசுவாமி, விருதாச்சலம் உள்ளிட்ட 85 கோவில்கள் நீரில் மூழ்கியுள்ளன.
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட தரை பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடலூரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிர்கள் விடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நீரில் மூழ்கி நாசமானது. 30 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். ஏரிகள் அனைத்தும் முழு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.