தமிழகம் முழுவதிலும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப அட்டையின் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டு அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.