தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்க கடலில் உருவான புரெவி புயல் 2 நாட்களுக்கு முன் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையால் இருந்த ஏழு பேரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய், எருதுக்கு 25 ஆயிரம் ரூபாய், கன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய், ஆடுக்கு 3000 ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் கவலையைப் போக்கி உள்ளது.