Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

06-12-2020, கார்த்திகை 21, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி இரவு 07.45 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

ஆயில்யம் நட்சத்திரம் பகல் 02.46 வரை பின்பு மகம்.

சித்தயோகம் பகல் 02.46 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சஷ்டி விரதம்.

முருக — நவகிரக வழிபாடு நல்லது.

 

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

இன்றைய ராசிப்பலன் –  06.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வெளி பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனங்களால் வீண் விரயம் இருக்கும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றம் இருக்கும்.உற்றார் உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும் அதுவே நல்லது.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து போகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்ய வேண்டும். வீட்டில் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லதே தரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு சுப செலவுகள் ஏற்படும். உடல்நிலை சீராக இருக்கும். ஆன்மீக காரியங்களில் நாட்டம் செல்லும். தொழிலில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். சுப காரியங்களில் இருந்த முயற்சிகளில் தடைகள் விலகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். வீட்டில் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். உற்றார் உறவினர் மூலம் உதவிகள் உண்டாகும். பணப்பிரச்சனை தீர்க்க சிக்கனம் உடன் இருக்கவேண்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு சுக செய்திகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த பிரச்சினை விலகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அளிக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு பாதிப்புகள் வரும்.வீட்டில் பொருளாதார நெருக்கடி உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் உதவிகள் கிடைக்கும்.வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும். ஆன்மீக வழிபாடு நல்லதைக் கொடுக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சிறப்பு அமையும். வீட்டில் ஒற்றுமையான சூழல் இருக்கும்.ஆடை ஆபரணம் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும்.தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு புதுப் பொலிவுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக அமைவார்கள். வியாபார ரீதியில் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும்.பகல் 02.46 மணிக்கு உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களில் இடையூறுகள் இருக்கும். எதிர்பாராத விதத்தில் செலவுகள் உண்டாகும்.உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு மனக் குழப்பத்துடன் இருப்பீர்கள்.பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை அமையும்.பகல் 2.45 மணிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருக்க வேண்டும்.தொழில் செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் கவனம் அவசியமாக வேண்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக அமையும்.உற்றார் உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சூழ்நிலை உண்டாகும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் கூடும். பெரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

Categories

Tech |