Categories
தேசிய செய்திகள்

எடை குறையல… ஆனா காசு மட்டும் கரையுது… ஆத்திரத்தில் டாக்டரை… கணவன் செய்த காரியம்..!!

எடை குறைப்பதற்காக மருத்துவரிடம் சென்ற மனைவியின் எடை குறையாததால் கணவன் டாக்டரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர் மனோஜ் துதாகரா. அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அஜய் மொராடியா கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜ் அவரது மனைவியை எடை குறைப்பு சிகிச்சைக்காக அந்த டாக்டரிடம் அனுப்பி வைத்தார். அந்த டாக்டர் அவரிடம் அதிக அளவு கட்டணம் வசூலித்து உள்ளார். இருப்பினும் எதிர்பார்த்தபடி அவரின் எடை குறையவில்லை.

இதனால் மனமுடைந்த மனோஜ் டாக்டர் அஜய் மொராடியாவிடம் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு தகராறு செய்துள்ளார். டாக்டர் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆசிரியர் டாக்டரிடம் நடத்திய வாக்குவாதத்தின் போது ஆசிரியர் மருத்துவரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.

பின்னர் அவர் பணப்பையில் இருந்து 1,500 ரூபாய் கொள்ளை அடித்துவிட்டு தப்பியுள்ளார். இந்த கத்திக்குத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஆம்புலன்சில் டாக்டர் அஜய் மொராடியா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |