Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கையில் எலும்பு முறிவு” ஆபரேஷனுக்கு பின்…. சிறுமி திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி, ஹரிணி(3) மற்றும் பிரியதர்சினி(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி திடீரென்று கீழே விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு மருத்துவர்கள் பிரியதர்ஷினிக்கு கையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் அன்று இரவு 10.50 மணியளவில் இந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தை தவறான சிகிச்சையால் இறந்துள்ளது என்று கூறி, மருத்துவமனை முன்பு ராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் குவிந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தந்தை ராமகிருஷ்ணன் சரவணம்பட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் கொடுத்த தவறான சிகிச்சையால் மரணம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |