நடிகர் ரஜினி அரசியலில் காந்தி வழியில் நடப்பார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காந்தி தான் முதலில் ஆன்மீக அரசியல் பற்றி பேசினார்,தற்போது ரஜினி பேசுகிறார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். புரிதல் இல்லாமல் இருந்தபோது ரஜினியை விமர்சிப்பதாகவும், பின்னர் புரிந்து மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு தனது காந்திய மக்கள் இயக்கத்தை அதனுடன் இணைக்க போவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து ரஜினியை காந்தியுடன் ஒப்பிட்டு பேசியது பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.