விருச்சிகம் ராசி அன்பர்களே…! குறைவாக பேசுவதால் சிரமத்தை தவிர்க்க முடியும்.
தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செலவில் சிக்கனம் வேண்டும். தாயின் ஆறுதல் வார்த்தை மனதில் நம்பிக்கையை வளர்க்கும்.கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு சரியாகும். மனோ தைரியம் கூடும். சுப காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கூட கையில் நல்லபடியாக வந்து சேரும். பேச்சில் கடுமையை காட்டாமல் நடந்து கொண்டால் போதும். தீ, ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் அவசியம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை அவசியம். சேமிப்பதற்கு எப்பொழுதும் முயற்சிகளைச் செய்யுங்கள். வெளியிடுங்கள் செல்லும்பொழுது பாதுகாப்பை கவனித்துக் கொள்ளுங்கள். பணம் வாங்கும் பொழுதும் சரி கொடுக்கும் பொழுதும் எண்ணிப் பார்த்து வாங்க வேண்டும். குலதெய்வத்தை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள்.
காதலில் உள்ளவர்களுக்கும் பிரச்சனை இல்லை. மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் ஒன்று மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.