தனுசு ராசி அன்பர்களே…! அக்கம்பக்கத்தினரிடம் அன்பு வளரும்.
தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் நல்ல பலத்தைக் கொடுக்கும். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். வீண் செலவை மட்டும் குறைப்பது நல்லது. பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்லை.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கூட நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். கல்வியில் திறமை வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.