மகரம் ராசி அன்பர்களே…! புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.
எந்த விஷயத்தை செய்யும் பொழுதும் கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை அவசியம். பணம் விஷயத்தில் கண்டிப்பாக கவனத்தை பின்பற்ற வேண்டும். யாரிடமும் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேசினால் புதிய சிக்கல் ஏற்படக்கூடும். சராசரி அளவில் தான் பணவரவு இருக்கும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் முக்கியம். சுப செய்திகள் காலதாமதம் பிடிக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். தலைவலி வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்கும். வழக்குகளில் ஓரளவு சாதகமான கிடைக்கும். சிரிப்பு முகத்தில் இருந்தால் மட்டும் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
காதலின் உள்ளவர்கள் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் நல்லபடியாக படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான், ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.