Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை சரியா பாத்துக்கோ”… கண்டித்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை அருகே குழந்தையை கவனிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவை சேர்ந்த சல்மா சுல்தானா என்பவர் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றது. இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கணவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது குழந்தைக்கு கண்பார்வை கோளாறு உள்ளதாக தெரிகிறது.

இதனால் குழந்தையை கவனித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்து சல்மா சுல்தானா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |