நடிகை சினேகா தன் பெண் குழந்தைக்கு நடைபெற்ற காதணி விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சினேகா-பிரசன்னா தம்பதியின் பெண் குழந்தைக்கு பிரம்மாண்டமாக காதணி விழா நடைபெற்றுள்ளது . இவர்களுக்கு ஏற்கனவே விகான் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது . அந்தக் குழந்தைக்கு ஆத்யன்டா என பெயரிடப்பட்ட நிலையில் தற்போது காதணி விழா நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் பிரசன்னா மற்றும் அவரது மகன் விஹான் இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சினேகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தை ஆத்யன்டாவுக்கு மொட்டை அடித்து காது குத்தி அவள் தூங்கும் போது நெற்றியில் முத்தமிடுவது போன்ற அழகான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.