Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரின் லவ் டார்ச்சர்… வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் ஒருவருடன் பேசியது தெரியவந்தது.

அந்த வீடியோவில் எதிர்முனையில் ஒரு ஆண் இருந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வீடியோ முழுவதும் பதிவாகியிருந்தது. எதிர்முனையில் பேசியவரிடம் பாரதியின் செல்போனிலிருந்து குறுந்தகவலை அனுப்பி பேச்சு கொடுத்து அந்த நபரை விருதுநகர் சென்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் விருதுநகர் மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த 32 வயதான முத்துக்குமரன் என்பதும், அவர் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. ஹலோ ஆப் மூலம் பாரதி டன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை சாதனமாகிய முத்துக்குமரன் பாரதியை நேரில் வரவழைத்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து தன்னை காதலிக்குமாறு இல்லை என்றால் குடும்பத்தை கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வழக்குப்பதிவு செய்து போலீசார் குமரேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |