டிசம்பர் முதல் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
திங்கள்கிழமை (டிசம்பர் 7 ) முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
1.மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்.
2.வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும்.
3.தொற்று அறிகுறி உள்ள மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
4.ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி உண்டு.
5.கல்லூரியில் மாணவர் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி.
6.ஆசிரியர்கள், பேராசிரியர்கள் “ஆரோக்கிய சேது” செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட 15 பக்கங்கள் கொண்ட நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.